வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல்… தயாரிப்பாளர்கள் வைத்த செக்!

Photo of author

By Vinoth

வாரிசு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல்… தயாரிப்பாளர்கள் வைத்த செக்!

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

விஜய், தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாராசடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இந்த படம் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வாராசடு என்ற பெயரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பண்டிகை நாட்களான சங்கராந்தி மற்றும் தசரா ஆகிய நாட்களின் போது நேரடி திரைப்படங்களை ரிலீஸ் செய்யவே திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்கக் கூடாது என சில ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

அந்த முடிவைக் காரணம் காட்டி இப்போது வாரிசு படத்துக்கு திரையரங்குகள் ஒதுக்கக் கூடாது என தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் முன்னர் அந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்தவரே வாரிசு படத்தின்  தயாரிப்பாளர் தில் ராஜுதான். அவரின் அந்த செயல் இப்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளது.