விஜய் + விஜயகாந்த் ரசிகர்களால் உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தவெக மற்றும் தேமுதிக கூட்டணி உருவாகும் என்ற கணிப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔹 அதிமுகவின் புறக்கணிப்பால் தேமுதிக புதிய கூட்டணி முயற்சி
🔹 விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களின் சென்டிமென்ட் + வாக்குச் சதவீதம் இணைந்து வெற்றிக்கூட்டணியாக மாறுமா?
தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்துக்குள்ளான கால அவகாசமே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், தமிழ் திரைப்பட நடிகர் விஜய்யின் தவெக கட்சியும், விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கலாம் என்ற தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தெளிவாக புறக்கணிக்கப்பட்ட தேமுதிக, அவர்களுக்கான அடுத்த வாய்ப்பை நோக்கி பார்க்க ஆரம்பித்துள்ளது. 2021-ம் ஆண்டு தேர்தலிலேயே தேமுதிகவை புறக்கணித்த அதிமுக, இந்த முறை பேச்சுவார்த்தை கூட இல்லாமல் ராஜ்யசபா சீட் வாயிலாக கழட்டி விட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பாஜகவையும் நெருங்க முடியாமல் தேமுதிக தற்போது குழப்பத்தில் இருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சியும், ஆரம்பத்தில் அதிமுகவை நோக்கி இருந்தாலும், எதிர்பார்த்த முறையில் ஒத்துழைப்பு கிடைக்காததால், தற்போது தனிப்பட்ட பாதையில் பயணிக்கிறது. இந்த நிலையில், தவெக மற்றும் தேமுதிக இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அது எந்த அளவுக்கு இரு கட்சிகளுக்கும் பயனளிக்கும் என்று அந்ததந்த கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அரசியல் விமர்சகர்கள் கூறுவது போல, இந்த கூட்டணி இரண்டு கட்சிகளுக்கும் பலனளிக்கக்கூடியதாக இருக்கலாம். தேமுதிக, கடந்த காலத்தில் 10% வாக்கு வங்கியுடன் தமிழகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருந்த கட்சி தற்போது விஜயகாந்த மறைவிற்கு பிறகு குறைந்தது 3 முதல் 5 சதவீதம் வாக்கு வங்கி இருக்கலாம். அதேபோல், தற்போது விஜய்க்கு மாநிலம் முழுவதும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது — ஆனால், அது வாக்குகளாக மாறுமா என்பது பெரிய கேள்வி.
விஜயகாந்துடன் நடித்த “செந்தூரப்பாண்டி” படம், விஜய்க்கு திரையுலகத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதனால், இருவரும் அரசியலிலும் ஒன்றாக இணைந்தால், ரசிகர்களிடையே சென்டிமென்ட்டாகவும், வாக்காகவும் அதிலிருந்து பெரிய ஆதரவு உருவாகலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.இந்த அரசியல் செண்டிமெண்ட் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அனைவருக்கும் கேள்விக்குறியாக உள்ளது.
📌 சாதகமான அம்சங்கள்:
தவெகக்கு: பெரிய கட்சி ஆதரவு + தேர்தல் அடிப்படை அமைப்பு
தேமுதிகக்கு: இழந்த ரசிகர் வாக்கு மீட்பு + மீண்டும் முன்னணி இடம்
விஜய் ரசிகர்களுக்கு: விஜய் + விஜயகாந்த் என உணர்ச்சி சார்ந்த அரசியல்