இணையத்தை கலக்கும் தளபதி விஜய் மனைவி மகள் புகைப்படம்!

Photo of author

By Parthipan K

இணையத்தை கலக்கும் தளபதி விஜய் மனைவி மகள் புகைப்படம்!

Parthipan K

தளபதி விஜய்யின் மனைவி மற்றும் மகளின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக, நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார்கள்.

நடிகர் விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர்.சில வாரங்களுக்கு முன்பு கூட, பட்டமளிப்பு விழாவில் சஞ்சய் மற்றும் சாஷா இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் சாஷாவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்தும், கதாநாயகி தயார் என்றும் கமெண்ட் செய்துவருகின்றனர்.