விருமன் படத்தை முதல்நாளே திரையரங்கில் பார்த்த விஜய் மனைவி சங்கீதா

Photo of author

By Vinoth

விருமன் படத்தை முதல்நாளே திரையரங்கில் பார்த்த விஜய் மனைவி சங்கீதா

விருமன் திரைப்படம் இன்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இன்று வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான கதையை எடுத்து வைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் படத்துக்கு  முதல்நாளில் நல்ல கூட்டம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியான படத்தை முதல்நாளே சென்னையில் உள்ள திரையரங்கில் பார்த்துள்ளார் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா. வழக்கமாக அவர் இதுபோல திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பதில்லை. ஆனால் இன்று முதல்நாளே விருமன் திரைப்படத்தைப் பார்த்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இன்று படம் ரிலீஸான நிலையில் முன்னதாக ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் நேற்று வெளியானது. அந்த காட்சியில் கார்த்தி தனது தந்தை பிரகாஷ் ராஜை அடித்த ஆர் கே சுரேஷுக்கு மோதிரம் போட்டு பாராட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியின் போது கார்த்தி மற்றும் சூரி ஆகியோட் சொலவடைகளை சொல்லி பிரகாஷ் ராஜை கலாய்க்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி இப்போது சமூகவலைதளங்களில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.