தன்னுடைய ஆரம்பகால சினிமாவில் மிகவும் கஷ்டங்களை எதிர்கொண்டவராகவும் இப்பொழுது மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களால் எப்பொழுதுமே விரும்பக் கூடியவராக திகழக்கூடியவர்தான் நடிகர் விஜய். இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் இவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என பல இயக்குனர்களை சந்தித்ததாக இவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். யாரும் முன் வராத நிலையில் தானே தன் மகனை வைத்து படம் எடுத்ததாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் பல சரிவுகளை கண்டாலும் அதன் பின் தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இன்றுவரை வைத்திருப்பவர் நடிகர் விஜய். நடிப்பில் இருந்து மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என தெரிவித்து தற்பொழுது விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக்கழகமாக மாற்றி அரசியலில் நுழைந்திருக்கிறார். ஜனநாயகன் திரைப்படமே தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும் அதன் பின் முழுவதுமாக அரசியலில் இறங்கி மக்களுக்கான நற்பணிகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நடிகர் விஜய் அவர்களின் சச்சின் திரைப்படம் ஆனது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் இந்த திரைப்படமானது தற்பொழுது வெளியாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மிஸ்கின் விஜய் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இயக்குனர் மிஸ்கின் விஜய் அவர்கள் குறித்து தெரிவித்திருப்பதாவது :-
கலைத்துறையை விட்டு விஜய் அவர்கள் விலக மாட்டார் என்றும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டே இருப்பார் என்றும் தான் நினைப்பதாக இயக்குனர் மிஸ்கின் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவிக்கும் பொழுது தன்னை பொறுத்தவரை அவர் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டே சினிமாவில் இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
சினிமாவை விட்டு கமல் ரஜினியும் விலகி விட்டார்கள் என்றால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா அதேபோலத்தான் நடிகர்கள் விஜயும் அஜித்தும் அவர்கள் சினிமாவை விட்டு விலகி விட்டார்கள் என்றால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவே நடிகர் விஜய் எப்பொழுதும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.