TVK: தமிழக அரசியல் களமானது 2026 தேர்தலுக்கு பின் பல்வேறு மாற்றங்களை சந்திக்க உள்ளது. அதிலும் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டிகளையும் தாண்டி பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் விஜய்-க்கு இருக்கும் வரவேற்பானது மற்ற அலாதியானது. அதிலும் திமுக தான் இவரது அரசியல் எதிரி எனக் கூறியுள்ளதால் அவரை முடக்குவதற்கு பல சந்தரப்பங்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்படி அவர்களுக்கு ஏற்றவாறு அமைந்தது தான் கரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் சந்திப்பு, மற்ற மாவட்டங்களில் இல்லாத உயிரிழப்புக்கள் இங்கு தான் அரங்கேறியது.
இதற்கு பின்னணியில் பல்வேறு காரன்கள் சொல்லப்பட்டாலும், போதிய பாதுகாப்பு இல்லை என்பதும் மற்றொரு, பக்கம் ஆளும் கட்சியின் தலையீடு உள்ளதையும் பார்க்க முடிகிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த போது இவ்வளவு மும்முரம் காட்டாதவர்கள், விஜய்யினுடைய மக்கள் சந்திப்பின் உயிரிழப்பிற்கு மட்டும் பல்வேறு நடவடிக்களை முன்னெடுத்தனர். மீண்டும் விஜய் எந்த மாவட்டத்திற்கும் சென்று தலை தூக்க கூடாது என்பதில் தெள்ளந்தெளிவாக உள்ளனர்.
இவையனைத்தும் ஆளும் கட்சியானது விஜய் யின் வளர்ச்சியை குறித்து அஞ்சுவது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனது அரசியல் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது விஜய் தனக்கு சின்னம் ஒதுக்க கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தலில் சின்னம் ஒதுக்க கோரி சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு 7 மாதங்களுக்கு முன்பாகவே மனு அளிப்பது கட்டாயம்.
அதிலும் தேர்தல் ஆணையம் தரும் இலவச சின்னங்களில், 10 சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும். மேற்கொண்டு 3 புதிய சின்னத்தையும் அவர்களாகவே பரிந்துரை செய்யலாம். ஆனால் பரிந்துரை செய்யப்படும் சின்னத்தை யாரும் பயன்படுத்திருக்கவும் கூடாது. தமிழக வெற்றிக் கழகம் தனக்கென 3 சின்னங்களை பரிந்துரை செய்யுமா என்பதை நவம்பர் அல்லது அதன் தொடர்ச்சி மாதங்களில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

