இந்த மாதிரியான விஷயங்களை விஜய் எப்பவும் விரும்பமாட்டார்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!

0
51
Vijay would never like this kind of thing! Bussy Anand Open Talk!
Vijay would never like this kind of thing! Bussy Anand Open Talk!

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரின் உதவியாளராக பணியாற்றியவர் தான் இந்த புஸ்ஸி ஆனந்த். பின்னர் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் புஸ்ஸி என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆனந்த். புஸ்ஸி தொகுதியில் வென்ற பிறகு தான் இவருக்கு புஸ்ஸி ஆனந்த் பெயர் தோன்றியது. இவர் ஆரம்பம் முதலே மிகத் தீவிரமான விஜய் ரசிகர். பின்னர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்து விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர்ந்து தற்போது தவெக கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஆரம்பம் முதலே தளபதியுடன் இருப்பதால் விஜய் என்னென்ன உதவிகள் செய்துவந்தார், விஜய் எப்படிப்பட்டவர் என்று இவருக்கு நன்றாக தெரியும். அண்மையில் விஜய் பற்றியும், அவருடைய குணநலன்கள் பற்றியும் பேட்டி கொடுத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

விஜய் எப்போதும் உதவி செய்வதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். இந்த கை கொடுப்பது அந்த கைக்கு தெரியக்கூடாது என்கிற பழமொழி படி வாழ்பவர் விஜய். அண்மையில் மூன்று மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு 18 லட்சம் தேவை என்கிற செய்தி விஜய்க்கு கிடைத்த போது 18 லட்சம் கொடுத்து அந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவினார். ஒரு போட்டோ கூட எடுத்து அதை பிரபலப்படுத்த வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.

உலகம் முழுவதும் வாழும் 700 கோடி மக்களில் அதிகம் தேடப்பட்டவர் நடிகர் விஜய். அவருக்கு இந்த பிளக்ஸ், பேனர் வைப்பதில் உடன்பாடில்லை. எதுக்கு இப்படி இந்த பசங்க எல்லா பக்கமும் பிளக்ஸ், பேனர் வைக்கிறாங்க, இதெல்லாம் அவங்கள பண்ண வேணாம்னு சொல்லுங்க என்று என்னிடம் நிறைய முறை விஜய் சொல்லி இருக்கிறார். மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், தாய்மார்கள், பெண்கள் கூடும் இடங்களிலும் இந்த மாதிரியான பிளக்ஸ், பேனர் வைத்து யாரையும் தொந்தரவு பண்ணவேண்டாம் என்று நம் கட்சி தொண்டர்களை வலியுறுத்துமாறு விஜய் என்னிடம் சொன்னார் என பேட்டி கொடுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

Previous articleமாதாம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. இதோ முதல்வர் சொன்ன முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் நோட் பண்ணிக்கோங்க!!
Next articleFlashback: ஜெயலலிதாவை நான் எதிர்க்க இது தான் காரணம்!! ரஜினி ஓபன் டாக்!!