சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ!

0
173

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ!

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது தெரிந்ததே. ’கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்தில் ’உன்னாலே உன்னாலே’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் பிரியங்கா மோகனன் என்பவர் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் தெலுங்கு ’கேங்ஸ்டர்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பதும் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் காமெடி வேடத்தில் நடிக்க யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பில் கிரண் கலை இயக்கத்தில் அன்பறிவ் சண்டைப்பயிற்சியில் பல்லவிசிங் காஸ்ட்யூம் டிசைனில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் கவின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவிருப்பதாகவும் தெரிகிறது

Previous articleகூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்!
Next articleஅரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு! நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.வி.சண்முகம் உறுதி