நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படம்! பிரபல தயாரிப்பாளர் உறுதி செய்தார்!

Photo of author

By Parthipan K

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படம்! பிரபல தயாரிப்பாளர் உறுதி செய்தார்!

நடிகர் விஜய் இளையதளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.இவரைத் தற்போது ரசிகர்கள் தளபதி என்றே அழைக்கின்றனர்.இவர் தமிழ் சினிமாவில் இதுவரை 64 திரைப்படங்களில் நடித்துள்ளார்.முன்னணி இயக்குனர்கள் பலருடனும் இவர் பணியாற்றியுள்ளார்.இவர் நடிக்க வந்த ஆரம்பக் காலகட்டங்களில் காதல் திரைப்பங்கள் மட்டுமே நடித்து வந்தார்.பிறகு மாஸ் திரைப்படங்களில் நடித்தார்.தற்போது வரை அவர் மாஸ் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.தமிழ்நாட்டைத் தவிர்த்து வேறு மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர்.இவர் தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்து விட்டார்.இவரின் நடிப்பும் அதிரடியும் இவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.இவரது நடனமும் தனித்துவமாய் உற்சாகமாக இருக்கும்.இவரது 65வது திரைப்படம் இப்போது தயாராகி வருகிறது.இந்த படத்திற்கு பீஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.மேலும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்தத் திரைப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு தொடங்கியுள்ளது.இவரது அடுத்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதாக தகவல் வந்தது.மேலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி நடிகர் விஜய்க்கு ஒரு கதை கூறியதாகவும் அந்த கதை நடிகர் விஜய்க்கு பிடித்துப் போய்விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

எனவே நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது.ஆனால் இயக்குனர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதனால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.