விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ வளையத்திற்குள்? விளக்கம் அளித்த சிபிஐ அதிகாரிகள்!

Photo of author

By Sakthi

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்யின் உதவியாளர் சரவணன் விசாரணை செய்வதற்கு சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் எங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் பின்னணியை வைத்து பார்த்ததே பத்திரிக்கையாளர்களின் வாடிக்கையாகி விட்டது என்று தெரிவிக்கிறார்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சமீபத்தில் அதிமுக பிரமுகர் மீது நாங்கள் எடுத்த நடவடிக்கை கூட இவ்வாறு தான் அனைத்து பத்திரிகைகளும் அரசியல் பின்னணி தான் காரணம் என்று தெரிவித்தது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால், தமிழ்நாட்டில் சிபிஐக்கு பல வழக்குகள் விசாரணைக்கு என வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் அளவிற்கு எங்களுடைய சிபிஐ குழுவினருக்கு அதிக எண்ணிக்கை இல்லை ஆகவே ஒரு வழக்கை முடித்து அதில் சில முன்னேற்றமும், தகவல்களும், கிடைத்த பின்னர் அடுத்த வழக்கை கையில் எடுப்போம் இது எங்களுக்குள் நடக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றது.

அதன் அடிப்படையிலேயே ,முன்னரே விசாரணை செய்து வந்த ஒரு வாரத்திலேயே ஒரு சில விவரங்களை முடித்த பின்னர் பொள்ளாச்சி வழக்கின் மீது எங்களுடைய கவனத்தை செலுத்துகின்றோம். அந்த விவகாரத்தில் அந்த நபர் உட்பட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான ஆதாரங்கள், மற்றும் முகாந்திரங்கள், போன்றவை இருந்ததால் நடவடிக்கை எடுத்தோம் அவ்வளவுதான் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

சென்ற 2013ஆம் வருடம் மார்ச் மாதம் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று வாங்கி வந்த ஹம்மர் சொகுசு ஊர்தி குறித்த விசாரணை நடத்துவதற்காக அவருடைய தேனாம்பேட்டை இல்லத்திற்கு போனபோது ,ஏதோ அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்காக எங்களுடைய புலனாய்வுக்குழு இவ்வாறு செய்கிறது என்று நினைத்து அங்கே ஒன்று கூடிய அவருடைய ஆதரவாளர்கள் கட்டைகள், கற்கள் போன்றவற்றால் எங்களை தடுக்க முற்பட்டனர். காரணம் அப்பொழுது மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் அதில் பங்குபெற்ற அதிமுகவிற்கும் இடையேயான அரசியல் பிரச்சனை தான் காரணம் என்று ஊடகங்கள் எப்போதும் போல அசை போட்டன.

எங்கள் புலனாய்வு குழு உதயநிதி குறித்த வழக்கு சம்பந்தமாக ஆதாரங்களை சேகரிப்பு செய்து அது குறித்து உதயநிதி விசாரணை செய்ய வேண்டும் என்று எங்கள் தரப்பில் சில தினங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் அந்த சமயத்தில் இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக திமுகவுக்கும், காங்கிரசுக்கும் ,இடையே ஒரு சில கோபங்கள் இருந்த காரணத்தால், அந்த சம்பவத்திற்கு இருந்து தான் நாட்கள் கழித்து நாங்கள் விசாரணைக்கு போனதால் கூட்டணி குறித்து எங்கள் விசாரணைதான் என்று ஊடகங்கள் தெரிவித்தன. ஆனாலும் அது குறித்து நாங்கள் சில தினங்களுக்கு முன்பாகவே முடிவு செய்து அவரை விசாரிப்பதற்கு தேதியை முடிவு செய்து இருந்தாலும் அதே சமயம் அரசியல் ரீதியாகவும் ஒரு சில சம்பவங்கள் நடந்த காரணத்தால், இது இரண்டுக்கும் ஊடகங்களால் முடிச்சுப் போடப் பட்டு விட்டது.

அந்த சமயத்தில் மத்திய நிதி மந்திரியாக இருந்த ப. சிதம்பரம் அதிகாரத்தில் இருக்கும் செல்வாக்கை உபயோகப்படுத்தி திமுகவுக்கும் ,காங்கிரசுக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்த சென்னையில் இருக்கும் சிபிஐ அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சோனியாவிடம் புகார் தெரிவித்து இருக்கின்றார் ஜெயலலிதா. உடனடியாக சோனியா பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்து சென்னையில் அப்போது இருந்த சிபிஐ அதிகாரிகள் மாற்றியிருக்கிறார்கள்.உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து இதே போல வெளிநாட்டு கார் விவகாரத்திற்காக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் விசாரணை செய்ய திட்டம் போட்டிருந்தோம் ஆனாலும் சென்னை சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்ட காரணத்தால் அந்த திட்டத்தை செய்ய இயலவில்லை.

ஆகவே எங்களுக்குள் நடக்கும் ஒருசில விவகாரங்களுக்கு அரசியல் சாயம் பூசப்படுவது போல தான் இப்பொழுது விஜயபாஸ்கர் அவர்களின் உதவியாளர் சரவணனை நாங்கள் விசாரணை செய்து வருவதாகவும் ஒரு தகவல்கள் வெளியாகி இருக்கின்றது .குட்கா வழக்கை விசாரணை செய்துவரும் அதிகாரிகள் அதனை அடுத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

எங்களைப் பொறுத்த வரையில் அநேக வழக்குகளை விசாரணை செய்து வருகின்றோம். ஆனாலும் அரசியல் முக்கியத்துவம் பெற்ற வழக்குகளில் நாங்கள் துறை ரீதியாக நடவடிக்கை எதுவும் எடுத்தோம் ஆனால் அது வேறு விதமாக சித்தரிக்கப்படுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. பல வழக்குகள் அரசியல் தலையீடு இல்லாமல் நடந்து வருகின்றது அரசின் தலையீடு உள்ள வழக்குகளும் இருக்கின்றது.

ஆனாலும் கூட தற்சமயம் அமைச்சர் விஜயபாஸ்கர் இன் உதவியாளர் சரவணனை நாங்கள் விசாரணைக்கு அழைத்து போனதாக வெளியாகும் தகவல்களில் உண்மை கிடையாது எனவும் விளக்கிக் கூறினார்கள்.