கடைசி போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி!

0
47

328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி, விக்கெட் எதுவும் கேட்காமல் 4 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்த காரணத்தால் நேற்றைய தின ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசி நாளான இன்றைய தினமும் மழை இருக்கும் காரணத்தால் ,இந்திய அணி வெற்றி அடையுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகின்றது. இந்த விவகாரத்தில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 169 ரன்கள் எடுத்து ஆட்டம் எழுந்ததை அடுத்து தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் எடுத்து 60 ரன்கள் சேர்த்து இருந்தது.

மூன்றாவது தினமான நேற்றைய தினம் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக பேட்டிங் செய்தார்கள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 111. 4 ஓவர்களில் 336 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

அதன்பிறகு 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி, முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் 21 ரன்கள் எடுத்து மொத்தமாக 54 ரன்கள் முன்னிலை அடைந்திருந்தது. இந்த நிலையில்தான் ஜனவரி மாதம் 18ஆம் தேதி இன்றைய தினம் ஆரம்பித்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி எல்லா விக்கெட்டுகளை பறிகொடுத்து 294 ரன்கள் எடுத்திருக்கிறது.

328 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி, விக்கெட் இழக்காமல் 4 ரன்கள் எடுத்த சமயத்தில் மழை வந்த காரணத்தால் இன்றையதினம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கடைசி நாளான நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய அணி வெற்றி அடையுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.