மிகுந்த வேதனையுடன் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!

Photo of author

By Sakthi

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சி பணிகளை கவனித்து வருகிறார்.

அதாவது சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்த் அவர்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை வழங்கப்பட்டது, அதன்பிறகு இந்தியா வந்தவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக, கட்சி பணிகளை அவருடைய மனைவியும், மகன்களும் கவனித்து வருகிறார்கள். தேமுதிகவின் பொருளாளராக தன்னை நியமனம் செய்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் தற்போது மிகத் தீவிரமாக காட்சிப்பணிகளை கவனித்து வருகிறார், கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட முக்கிய வேலைகளில் அவர் நேரடியாக இறங்கி செயல்பட்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சிவகாசி அருகே இருக்கின்ற புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக, 5 பேர் பலியானது புது வருடப் பிறப்பில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ஆங்கிலப்புத்தாண்டு நன்னாளில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருக்கின்ற புதுப்பட்டி என்ற கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக, அதில் சிக்கி 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும், தருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே எதிர்காலத்தில் பட்டாசு விபத்துகளை தடுக்க உரிமம் இல்லாமல் பட்டாசு ஆலைகளை நடத்துபவர்கள் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இதற்காக தமிழக அரசுத்துறை சார்ந்த தனி குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும், பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் படுகாயமடைந்து இருக்கின்ற நபர்களை மிக விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாக அதில் அவர் தெரிவித்து இருக்கிறார்.