பருவ மழையின் காரணமாக பாதிப்படைந்த நெற்பயிர்கள்! ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்குக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

0
81

காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையின் காரணமாக, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களிலும் கூடுதலான பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்து இருக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சேதமடைந்து இருப்பது டெல்டா விவசாயிகள் உள்ளிட்டோரை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது .

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா பயிர்கள் சேதம் அடைந்திருக்கின்றன. கடலூர் மாவட்டத்திலும் தொடர் மழையின் காரணமாக, ஒரு சில ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் சேதமடைந்தன ஒரு சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், பயிர்கள் மழையில் சேதமடைந்து இருப்பதால் அவற்றரிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்ற பகுதிகளில் கதிர் பிடிக்கும் நிலையில் இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி விட்டனர் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்கள் நல்ல விளைச்சல் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் முதலீடு நாசமாகி கடனாளியாக மாறிவிடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் .

நவம்பர் பிற்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, சேதமடைந்த சம்பா பயிர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை. முதல் இரண்டு கட்ட மழையில் தப்பிய சம்பா பயிர்கள் கூட தற்சமயம் சேதம் அடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அவற்றுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்காவிட்டால் விவசாயிகள் மீளமுடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் வானம் பெய்தாலும், காய்ந்தாலும், இதனால் பாதிக்கப்படும் முதல் இனம் விவசாயிகள் இனம்தான் என்று குறிப்பிட்டிருக்கின்ற அவர்பாதிக்கப்படும்போது நிவாரணம் வழங்கி காப்பாற்றிவிட்டால் ஒரு கட்டத்தில் நாம் உணவுக்காக சிரமப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்கள் உண்டான பாதிப்பை கணக்கிட்டு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், நவம்பர் மாத மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் இழப்பீட்டை இதே அளவு உயர்த்தி உடனடியாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார்.