மகனுக்கு மணப்பெண்ணை முடிவுசெய்த பிரேமலதா விஜயகாந்த்: மணப்பெண் யார் தெரியுமா

Photo of author

By CineDesk

மகனுக்கு மணப்பெண்ணை முடிவுசெய்த பிரேமலதா விஜயகாந்த்: மணப்பெண் யார் தெரியுமா


கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் தம்பதியின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு மணப்பெண் பார்த்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு திருமணம் முடிக்க இருவீட்டார்களும் முடிவு செய்தனர். இது குறித்த பூ வைக்கும் நிகழ்ச்சி நேற்று கோவை அருகே நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் எல்கே சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதாகவும் விஜயபிரபாகரன்-கீர்த்தனா திருமணம் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இருவீட்டார்கள் தெரிவித்துள்ளனர்

இந்த திருமண பூ வைக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பதும் அவர் உடல் நிலை காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது இருப்பினும் அவரது சார்பில் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜயகாந்த் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்