தொண்டர்களுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

Photo of author

By Sakthi

வருகின்ற ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் விமர்சையாக நடைபெற்று முடிந்தது தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் தேர்தல் ஆணையம் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.அதேபோல அரசியல் கட்சிகளும் தங்களின் எல்லை மீறாமல் அனைத்து தொகுதிகளிலும் அமைதியான முறையில் கட்டுப்பாடுடன் இருந்து தமிழக சட்டசபை தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறார்கள்.இந்தநிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகச் சிறப்பாக பணியாற்றிய தன் கட்சி நிர்வாகிகளை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் பாராட்டியிருக்கிறார். அதேபோல தன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் இறங்கி இருந்தார்கள். இவர்களின் வெற்றிக்காக நம்முடைய கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஒன்றிணைந்து இரவு பகல் பார்க்காமல் தீவிரமாக களப்பணி ஆற்றி இருக்கிறார்கள். சிறந்த முறையில் பணி செய்த கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர்கள் போன்றோருக்கு நமது கட்சியின் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

பணபலம், அதிகார பலம் போன்றவற்றை தைரியத்துடன் சந்தித்து தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாக பணி செய்து கலந்துகொண்ட சிங்கங்களாக ஜனநாயகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக. எதையும் எதிர்பார்க்காமல் தமிழ் நாட்டின் எதிர்கால நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து சிறப்பாக பணி செய்து பாடுபட்ட எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் என்று தெரிவித்திருக்கிறார். வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான தவறுகளும் நடந்து விடாமல் இருக்க நம்முடைய தொண்டர்கள் இரவு பகல் பார்க்காமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2ஆம் தேதி எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகமும் அல்லது முறைகேடு போன்றவை நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மே மாதம் இரண்டாம் தேதி நமக்கெல்லாம் நிச்சயமாக நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவோம் என தெரிவித்து இருக்கிறார் விஜயகாந்த்.