மத்திய மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

Photo of author

By Sakthi

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, நாளுக்கு நாள் அதிகமாகி வரும் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் கட்டிட பணிகளை தொடர இயலாமல் கட்டுமான தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.

மணல், கம்பி, சிமென்ட், ஜல்லி, செங்கல், போன்ற கட்டுமான பொருட்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதால் கட்டுமான பணிகள் முழுவதுமாக வழங்கி இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

கட்டுமான தொழிலை சார்ந்திருக்கும் சாதாரண கூலித் தொழிலாளிகள் எல்லோரும் பயன்படுத்திய முதற்கட்டப் பணிகளை விரைவாக நடைபெறும் விதமாக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்தி கட்டுமான பொருட்களை விற்பனை செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் விஜயகாந்த்.

நோய்தொற்று பாதிப்பால் வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானத்தை இழந்து பல லட்சம் தொழிலாளர்களுக்கு இன்று வறுமையில் வாடி வருகிறார்கள். அவர்களுக்கு இது மிகப்பெரிய உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அந்த நேரத்தில் கட்டுமான தொழில் செய்து ஏற்கனவே விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கின்ற கட்டுமான தொழிலை மேம்படுத்த எரிமலை தேர்ந்தெடுக்கும் கட்டுமான பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் விஜயகாந்த்.