விஜயகாந்த் ஸ்ட்ரிட் கண்டிஷன்!! திரைப்படவியல் இளைஞர்களை இயக்குனர்களாக மாற்றிய தலைமை!!

Photo of author

By Gayathri

விஜயகாந்த் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் குறைந்த காலத்திலேயே அரசியலில் மக்களை வென்ற எதிர்க்கட்சி தலைவர். சினிமா துறையில் ஆரம்ப காலங்களில் இவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹீரோ வந்துவிட்டார் எழுந்து வாருங்கள் நடிக்க என்று அழைத்து விடுவார்களாம். சாப்பிடாமலேயே பலரும் எழுந்து செல்வார்கள் அதில் இவரும் ஒருவர். எனவே தான் இவர் முன்னணி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த முதலில் இருந்தே தன்னுடைய செட்டில் வேலை பார்க்கும் அனைவரிடத்திலும் சாப்பிட்டுவிட்டு தான் வேலை பார்க்க வேண்டும் என்று கண்டிஷனாக கூறிவிடுவாராம்!

அன்றைய காலங்களில் திரைப்படவியல் படித்து வரும் இளைஞர்களுக்கு சான்ஸ் வழங்க வேண்டும் என்பதற்காகவே அன்றைய இளைஞர்கள் இயக்கத்தில் வெளியான ஊமை விழிகள் படத்தை நடித்துக் கொடுத்துள்ளார். இதற்காக அவர் பெரிய தொகையும் பெறவில்லை. எனினும் வருங்கால இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக அவர் இதனை செய்துள்ளார். புதிதாக அறிமுகமாகும் பல இயக்குனர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர் இவரே.

1985 ஆம் ஆண்டு இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி உள்ளார். ஊமை விழிகள் படத்தை இயக்கி அறிமுகமான திரைப்படக் கல்லூரி மாணவர் அரவிந்த்ராஜ் தான் உழவன் மகன் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். ஆபாவாணன் இத்திரைப்படத்திற்காக வசனம் எழுதியுள்ளார். இந்த படப்பிடிப்பு தொடங்கிய முதலிலே நடந்த கலந்தாய்வில், எம்ஜிஆர் ஏற்கனவே செட்டில் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளார். ஆனால் அவரை விட ஒரு படி மேலாக, ஹீரோ முதல் அங்கு வேலை பார்க்கும் அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ட்ரீட் கண்டிஷனாக விஜயகாந்த் கூறியுள்ளார். அனைவருக்கும் வயிற்றுக்குத் தேவையான அளவிற்கு உணவு வழங்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் நடைமுறைப்படுத்தியும் உள்ளார்.