TVK DMDK: தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் மும்முனைப் போட்டியை விலகி தற்பொழுது விஜய்யும் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் கடும் போட்டி நிலவும் வாய்ப்பு அதிகம். அந்த வகையில் விஜய்யின் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட விபரீதத்தை அடுத்து பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. மாற்று கட்சி அரசியல்வாதிகளை தவிர்த்து தற்போது வந்த விஜய்க்கு இவ்வளவு வரவேற்பு இருப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதனால் பெரும்பாலான கட்சிகளிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய தொடங்கியுள்ளனர். அதிலும் அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்து வந்த செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது யாரும் எதிர்பாராத ஒன்று. அவரை கௌரவிக்கும் வகையில் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. மேலும், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகம் நேற்று வெளியாக இருந்த நிலையில், அதற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அதன் ரிலீஸ் தள்ளிப் போகியுள்ளது.
பொங்கல் என்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதன் தீர்ப்பையே ஜனவரி 29 க்கு தள்ளி வைத்துள்ளனர். இந்த சமயம் பார்த்து ஆளும் கட்சி காங்கிரஸ் என பலரும் படத்தின் மூலம் அரசியல் செய்து வருகின்றனர். இது குறித்து நேற்று நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் கூட விஜய்க்கு விஜயகாந்தின் மகன் அட்வைஸ் செய்துள்ளார். அண்ணா ஒருபோதும் காங்கிரஸ் அரசியலை நம்பாதீர்கள், அவர்கள் உங்களுக்கு தூண்டில் போடுகிறார்கள் ஜாக்கிரதை மாட்டிக்கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.