TVK DMK: 2026 யில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் பலமுனை போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு உட்கட்சியிலும் போட்டி நிலவி இரண்டு துருவங்களாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக இந்த சவாலை சந்திக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இம்முறை அதனுடன் சேர்ந்து பாமக-வும் இணைந்துக்கொண்டது என்றே சொல்லலாம். மேலும் அரசியல் பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள விஜய்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு இருக்கையில் ஆளும் கட்சி முதல் மாற்று கட்சியினர் வரை பலரும் பலவித சவாலை சந்தித்து தான் ஆட்சியில் அமரும் படி இருக்கும். இப்படி இருக்கையில் அதிமுக, பாஜக என மற்ற கட்சிகளின் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஓரளவிற்கு வியூகம் செய்ய முடியும். ஆனால் விஜய் இவர்களை எதிர்த்து முன் வர எந்த மாதிரியான திட்டங்களை தீட்டுவார் என்பது குறித்து அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த பலர் மாற்று ஆட்சி வேண்டும் என கேட்கவும் ஆரம்பித்துவிட்டனர். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இவரது அடுத்தக்கட்ட பேச்சு நடவடிக்கை இருக்க வேண்டுமென்பது கருத்து. அந்தவகையில் மாநாட்டை கடந்து, வீக்கெண்டு சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார். இதில் மற்ற மேடைகளில் இல்லாத பேச்சு திறன் நாகையில் பேசியுள்ளதாக சோசியல் மீடியா எங்கும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அங்கிருக்கும் குறைகள், மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரிலே உள்ள தட்டுப்பாட்டை கூறிய விதம் என திமுக-வை மட்டும் நேரடியாகவே தாக்கி பேசியிருந்தார். அதேபோல வரும் சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இது செந்தில்பாலஜியின் கோட்டை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதில் தனது பலத்தை காட்ட விஜய் முனைப்புடன் இருப்பதாகவும் அவரின் டார்கெட்டே செந்தில்பாலஜி தான் எனவும் கூறுகின்றனர்.
அவரின் ஊழல் வழக்கிலிருந்து ஆரம்பித்து தற்போது நடந்த கிட்னி திருட்டு வரை ஒன்று விடாமல் கூறி திமுக-வை தரைமட்டமாக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் திமுக வாக்கு வங்கி விஜய் பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக-வுக்கு நிரந்தர இடத்தை கொடுத்த கரூர் விஜய்க்கு எந்த இடத்தை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.