மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்… கோப்ரா இயக்குனரோடு கூட்டணி!

0
76

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்… கோப்ரா இயக்குனரோடு கூட்டணி!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே சென்றது. இந்த படத்தில் விக்ரம்  7 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடந்தது. ஆனால் அறிவிக்கப்பட்ட படி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் அடுத்து நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கே கொடுத்துள்ளாராம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கோப்ரா திரைப்படத்தின் தாமததத்துக்கும் பட்ஜெட் அதிகமானதுக்கும் இயக்குனர்தான் காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் மீண்ட்ய்ம் அவர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.