TVK: தமிழகத்தில் சமீப நாட்களாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் விஜய்யின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரை மாவட்டத்தில் 21ம் தேதி நடைபெற உள்ளது. அன்று கனமழை பெய்யக்கூடுமா? அப்படி பேயும் பட்சத்தில் மாநாடு நடக்குமா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது.
இது ரீதியாக தனியார் வானில ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், மதுரையை பொருத்தவரை வரும் 21 ஆம் தேதி பகல் நேரத்தில் அதீத வெப்பநிலையும் அதாவது 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மாலை நேரம் வெப்பம் குளிர்ந்து கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிலும் மதுரை மாவட்டம் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இயல்பான நாட்களில் வரும் வெப்பநிலையை காட்டிலும் அன்று அதிகமாகவே இருக்கும். அதேபோல வெயிலும் தாக்கமும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த மழை இரவு நேரம் முழுவதும் நீடிக்கும் என கூறியுள்ளதால் மாநாட்டு தேதியில் மாற்றம் ஏற்படுமா என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இரண்டாவது மாநாட்டில் தேதியானது தற்போது இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதலில் பண்டிகை தினங்கள் மாநாடு எனக்கூறி அனுமதி அளிக்காததால் 21 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தனர். தற்போது மழை பாதிப்பானது அதிகமாக இருக்கும் எனக் கூறுவதால் தொண்டர்கள் ரசிகர்கள் நலனை எண்ணி தேதியை மாற்றலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த முதல் மாநாட்டிலேயே சரியான திட்டமிடல் இல்லாததால் தொண்டர்கள் பலரும் வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டனர்.
தற்பொழுதும் அது போல் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகம் முனைப்புடன் வேலைகளை பார்த்து வருகிறது. அந்த வகையில் கனமழை பெய்யும் எனக் கூறினால் மாநாடு நடத்த முடியாமல் போகும் இதனால் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.