திமுகாவின் வாரிசு அரசியலை வெட்ட வெளிச்சம்மாக்கிய  விஜயின் 66! இவருக்கு பதில் உதயநிதி ஆப்ட்டாக இருப்பார் செல்லூர் கே.ராஜி கேலி!

Photo of author

By Parthipan K

திமுகாவின் வாரிசு அரசியலை வெட்ட வெளிச்சம்மாக்கிய  விஜயின் 66! இவருக்கு பதில் உதயநிதி ஆப்ட்டாக இருப்பார் செல்லூர் கே.ராஜி கேலி!

Parthipan K

Vijay's 66 that shed light on Timuka's successor politics! He will be replaced by Udayanidhi Apt Sellur K. Raji joke!

திமுகாவின் வாரிசு அரசியலை வெட்ட வெளிச்சம்மாக்கிய  விஜயின் 66! இவருக்கு பதில் உதயநிதி ஆப்ட்டாக இருப்பார் செல்லூர் கே.ராஜி கேலி!

அதிமுகவின் பொன் விழா மற்றும் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட கலக்கம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் முன்னால் அமைச்சர் செல்லூர் கே.ராஜி பேசினார்.அப்போது அவர் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு அதிமுக உருவான வராலாறு அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும் 50ஆண்டுகளில் 31ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அது அதிமுக தான்.அதிமுக திமுகவிற்கு செல்வங்களை அல்லிகொடுத்துள்ளது.எம்.ஜி.ஆர் க்கு பிறகு அதிமுக அழிந்து விட்டது என கலைஞர் உட்பட அனைவரும் நினைத்தார்கள்.அதிமுக பலமுறை இணைந்தும் பலமுறை பிரிந்த நிலைதான் இருந்தது.

தற்பொழுது கூட அவ்வாறு ஒரு சோதனையில் தான் அதிமுக இருகின்றது.மேலும் மக்கள் தற்போது எப்பொழுது ஸ்டாலின் போவார்,எடப்பாடி எப்பொழுது விடியல் தருவார் என எதிர்பார்த்து கொண்டிருகின்றனர்.

மேலும் ஓசி ஓசி என்று பேசும் திமுக அமைச்சர் பயன்படுத்தும் அனைத்துமே ஓசி தான்.அவருடைய மனைவிகளை தவிர அனைத்துமே ஓசி தான் என கூறினார்.தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டு காரணம் கூறி வருகின்றனர்.அதற்கு நிதி அமைச்சர் என்பவரே தேவையில்லை அதிகாரி மட்டும் போதும்.

ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்திற்கு தான் முதல் கையெழுத்து என கூறினார்கள்.ஆனால் நீட் தேர்வு நடப்பாண்டில் நடைபெற்று தான் வருகிறது.உதயநிதி ஸ்டாலின் செங்கலை தூக்கிய நாளில் இருந்து செங்கல் ,கம்பி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விளையும் உயர்ந்துள்ளது.

டாஸ்மாக் விற்பனையில் இலக்கு முயற்சி செய்யும் அவல நிலையில் தான் திமுக ஆட்சி நடகின்றது.மேலும்  இந்த ஆட்சியில் தான் சமூக விரோதிகள் அனைவரும் ஒன்று கூடி விட்டனர்.மேலும் கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வெடிப்பு.நடப்பாண்டில் கார் சிலிண்டர் வெடிப்பு உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனையடுத்து அவர் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வர உள்ள வாரிசு படத்தில் உன்னமையில் விஜய்க்கு பதில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும்.அதற்கு கதை கலைஞர்,திரைக்கதை ஸ்டாலினாக தான் இருக்க வேண்டும் என கேலி செய்து பேசினார்.தற்போது மக்கள் அதிமுக ஆட்சியை எதிர்பார்த்துகாத்துக்கொண்டுள்ளனர் என கூறினார்.