தமிழ் சினிமா துறையில் உச்ச நடிகராகவும் தற்பொழுது மிகத் தீவிரமாக அரசுகளில் இறங்கி இருக்கக்கூடிய அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருபவர் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் முதல் திரை அனுபவம் குறித்தும் அவரை திரையில் அறிமுகப்படுத்துவதற்காக எஸ் எ சி பட்ட கஷ்டங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
எஸ் எ சந்திரசேகர் பேட்டியில் கூறி இருப்பதாவது :-
தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்பதாலோ அல்லது மிகப் பெரிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மகன் என்பதாலோ மிக எளிதாக சினிமா வாழ்க்கையை தொடர முடியாது என்றும் விஜயினுடைய சினிமா துறை அனுபவத்தை துவங்குவதற்காக அவருடைய போட்டோ ஆல்பத்தை கையில் ஏந்தியவாறு பல இயக்குனர்களிடம் சென்று விஜய் அவர்களை வைத்து திரைப்படம் எடுக்கும்படி தான் வேண்டி நின்றதாகவும் கடைசியில் யாருமே துணை நிற்காத நிலையில், வேறு வழி இன்றி தானே தன்னுடைய மகனின் உடைய முதல் திரைப்படம் ஆன நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தை இயக்கியதாக சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய கனவு தன்னுடைய மகனை மற்றொரு இயக்குனர் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும் ஆனால் அது விஜயினுடைய வாழ்வில் நடைபெறாமல் போனது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் தற்பொழுது அவர் சினிமாவின் உச்ச நடிகரில் ஒருவராக இருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். சினிமாவில் நடிகர் விஜய் அவர்களின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இது தமிழகம் மட்டும் இன்றி உலக அளவில் விஜய் ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு ஆளாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது