விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!!

0
296
Vijay's next movie heroine!! Chosen by Venkat Prabhu!!
Vijay's next movie heroine!! Chosen by Venkat Prabhu!!

விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!!

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷா, அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது விஜயின் “தளபதி 68” படத்திற்கான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிகார பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. ஆனால் படத்தை இயக்குவது வெங்கட் பிரபுவாக இருப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என கூறப்பட்ட நிலையில், விஜய், அனிருத்தை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகின. மேலும் வெங்கட் பிரபு படத்தில் அவரது தம்பி பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார். ஆனால் விஜய், பிரேம்ஜியும் இந்த படத்தில் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் இன்னும் உறுதி படுத்த படவில்லை. இந்நிலையில் “தளபதி 68” படத்தின் கதாநாயகியை வெங்கட் பிரபு தேர்வு செய்து வைத்துள்ளாராம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சாய் பல்லவி. இந்த படம் அரசியல் கதைக்களம் உள்ள திரைப்படம் இதில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் நயன்தாரா நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்சினை இருந்தால் சாய் பல்லவி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகுழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!
Next articleமின்தடை பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம்.. குட்டையை குழப்பி விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!!