
TVK Congress: விஜய் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அதில் தனது அரசியல் எதிரி கொள்கை எதிரி யார் என்பதை தெள்ள தெளிவாக கூறினார். அப்போதையிலிருந்து பாஜக, திமுக என இருவரும் இவரை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் விஜய் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணி அனைத்தையும் உடைக்க நினைத்தார்.
அதனால்தான் எங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கு என்று அறிவிப்பை வெளியிட்டார். இதன் தாக்கமானது ஆளும் கட்சியில் நன்றாக பார்க்க முடிந்தது. தற்போது வரை திமுக கூட்டணி கட்சிகள் உரசல் போக்கில் தான் உள்ளன. மேலும் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவின் டெல்லி கூட்டணியான காங்கிரஸை தன்வசப்படுத்த நினைத்தார்.
இதனால் ராகுல் காந்திக்கு மறைமுக அழைப்பு சென்றதாகவும் இவர் மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது. இதுவே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 20௦9 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டது. அச்சமயத்தில் அவருடன் விஜய் துணை நின்றார். இதை வைத்து அவர் காங்கிரஸ் கட்சி என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது இயக்கம் குறித்து தான் பேசினோம் என கூறினார். ஆனால் இவர்களுக்குள் நல்ல பரஸ்பர உறவு உள்ளது என்பது அரசியல் வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் தொடர்ச்சி தற்போது வரை உள்ளது. மேலும் அதனை நிரூபிக்கும் விதத்தில், பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து ஊர்வலம் சென்ற ராகுல் காந்தியை கைது செய்தது குறித்து தற்போது விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் எதிர்க்கட்சி என திமுக வை கூறும் விஜய், அதன் கூட்டணியிலிருக்கும் காங்கிரசுடன் மட்டும் பரஸ்பர நல்லுறவு வைத்திருப்பது குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளது. அதன்படி, மதுரையில் நடைபெற போகும் 2 வது மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இது ரீதியாக அவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பனையூர் வட்டாரம் பேசி வருகின்றது. ஆனால் கட்சி ரீதியாக தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.