தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் விஜய் தற்பொழுது தமிழ்நாட்டின் நடந்த வரும் பல பிரச்சனைகள் குறித்து பேசினார். குறிப்பாக ஆளும் கட்சி கொடுக்கும் நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்காதது என அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கொண்டு இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு 100% பாதுகாப்பு அளிப்போம் என தொடங்கி கிட்டத்தட்ட 17 தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர்.
மேற்கொண்டு விஜய் கூறியதாவது, தற்போது வருபவன் எல்லாம் முதலமைச்சர் ஆகி விட முடியாது என்று கூறுபவர்கள் தான் எங்களை பொதுக்கூட்டம் என ஆரம்பித்து எங்கேயும் இடம் கொடுக்காமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். அதேபோல திமுக ஓட்டுக்காக காங்கிரஸ் உடனும், கொள்ளையடிப்பதற்காக ரகசிய கூட்டணியை பாஜக உடனும் வைத்துள்ளது. மேற்கொண்டு திமுகவை கரப்ஷன் கபடதாரிகள் என்றும் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் குறிப்பாக ஸ்டாலினை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே போல ஆதவ் அர்ஜுனா பேசும் பொழுதும் 1999 ஆம் ஆண்டே பாஜக வளர்வதற்கு கலைஞர் உறுதுணையாக இருந்ததாக கூறினார். அதன் ரகசிய கூட்டணி இப்பொழுது வரை தொடர்கிறது. மேற்கொண்டு அண்ணாமலை பெயரை எடுத்தாலே பலரும் திட்ட மட்டும் தான் செகிறார்கள் , எங்கள் தலைவரை கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்றும் பேசினார்.