விஜய்யின் வாரிசு திரைப்படம்! ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு

0
186
varisu
varisu

விஜய்யின் வாரிசு திரைப்படம்! ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு

கோலிவுட் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை வம்சி இயக்க பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கிறார்.

தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்புகளை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்ற அறிவிப்பை சிறப்பு போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Previous articleவழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம்
Next articleஇந்த மாதத்தில் மட்டும் 15 நாட்கள் விடுமுறை! தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்