நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

Photo of author

By Anand

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

Anand

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

தமிழ் திரையுலகின் தளபதி விஜய் அரசியல் களத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘விருசுவல் வாரியர்’ என அழைக்கப்படும் விஜய் ஆதரவாளர் மற்றும் யூடியூபர் விஷ்ணு, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பின்னர் அவருடைய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அவரை ஆதரித்து தீவிர இணைய பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அவரது ஆதரவாளர் விஷ்ணு, பல்வேறு வீடியோக்களில் விஜயின் நேர்மையான அரசியல் பார்வையை தூக்கி பேசினார். அதே போல திரைத்துறையில் விஜய்க்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு நடிகர் அஜித் மற்றும் அரவிந்தசாமி உள்ளிட்டவர்களை தர குறைவாக விமர்சித்தார்.

அதே போல விஜய்யின் அரசியல் எதிரிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கவும் அவர் கைகாட்டாமல் இருந்ததில்லை. விஜய்க்கு எதிராக யாராவது அரசியல் ரீதியாக கருத்து தெரிவித்தால் அவர்களையும் இவர் கடுமையாக சாடி வந்தார். இதனால், விஜய் ரசிகர்கள் மத்தியில் விஷ்ணுவுக்கு தனி இடம் உருவானது.

இந்நிலையில் இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. அதற்காக பாதிக்கபட்ட பெண்ணின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் விஷ்ணுவை அடித்து துவைக்கும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. நண்பனின் தங்கையிடம் இவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் அவரது அண்ணனிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது அண்ணன் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விஷ்ணுவின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது அண்ணன் அவரை அவரது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கும் வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரை அடிப்பதற்கான காரணமும் அந்த வீடியோவில் அவர்கள் கூறியுள்ளனர்.

யூடீயூப் அலுவலகத்தில் விஷ்ணு காண்டம் வைத்துள்ளதாகவும், அங்கு அதனுடைய தேவை என்ன என்பது குறித்தும் கேள்விகள் கேட்டவாரே அவரை அடித்து துவைக்கும் காட்சியானது வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு பேசிய போது தனது ரசிகர்களையும் விர்ச்சுவல் வாரியர் என குறிப்பிட்டிருந்தார். அப்படி குறிப்பிட்ட ஒரு விர்ச்சுவல் வாரியர் விஷ்ணு பெண்ணிடம் சில்மிஷம் செய்து தர்மஅடி வாங்கிய சம்பவம் அவருக்கு எதிராக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது