விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு

Photo of author

By CineDesk

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு

CineDesk

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 33வது படத்தின் டைட்டில் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பதிவு செய்துள்ளார்.

இந்த படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அழகான தமிழ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் நடித்து வரும் படங்களுக்கு ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட தூய தமிழ் டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் வெங்கடகிருஷ்ணா ரோஹித் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக விஜய்சேதுபதியுடன் இளம் நடிகை மேகாஆகாஷ் ஜோடியாக நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிம்புவின் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படத்திலும் தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்திலும் ரஜினியுடன் பேட்ட உள்பட ஒருசில படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ரொமான்ஸ் மட்டும் ஆக்சன் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்க உள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது

ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்து முடித்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் நவம்பர் 2ஆம் வாரத்தில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி அவரது ‘மாமனிதன்’ உள்ளிட்ட ஒருசில படமும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி தற்போது விஜய்யுடன் ‘தளபதி 64’ உள்பட சுமார் பத்து திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே