‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
149

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடித்து வந்தார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்திற்கு ஏற்கனவே ’அமர்’ மற்றும் கோப்ரா’ போன்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்த நிலையில் இந்த இரண்டில் ஒன்றுதான் இன்று அறிவிக்கப்படும் டைட்டில் என தெரிகிறது.

விக்ரம் ஜோடியாக ஸ்ரீனிதிஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தை லலித்குமார் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்
Next articleடெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க தோற்கும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ஆருடம்.