மீண்டும் ஜோடி சேரும் விக்ரம் – ஐஸ்வர்யாராய்!! மணிரத்தினத்தின் அடுத்த படம்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் மணிரத்தினம் இயக்கிய ராவணன் திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் முதன் முதலாக இணைந்து நடித்தார். இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இந்த திரைப்படம் இந்தியிலும் வெளியிடப்பட்டது. இதற்கு பிறகு இருவரும், தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இந்த படத்திலும் இருவரின் நடிப்பும் பேசப்பட்டது. இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கம் புதிய படமொன்றில் நடிகர் விக்ரம் கதாநாயனாக நடிக்க இருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சு வார்த்தை நடத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் தற்போது கமல் பட வேலைகளை பார்த்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு விக்ரம், ஐஸ்வர்யா ராய் படத்தை இயக்குவார் என தெரிகிறது.