மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி

Photo of author

By Vinoth

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி

Vinoth

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி

நடிகர் விக்ரம் சில நாட்களுக்கு முன்னர் நெஞ்சில் வாயுப் பிடிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார். சியான் விக்ரம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம்  7 கெட்டப்புகளில் நடித்துள்ளார். பல ஆண்டுகள் நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். இந்நிலையில் கோப்ரா படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 11 ஆம் தேதி (இன்று) நடக்கிறது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் விக்ரம் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் இன்று மாலை நடக்கும் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று அறிவித்துள்ளது.