தியேட்டரில் ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா… வெளியானது ஓடிடி ரிலீஸ் தேதி!

Photo of author

By Vinoth

தியேட்டரில் ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா… வெளியானது ஓடிடி ரிலீஸ் தேதி!

Vinoth

தியேட்டரில் ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா… வெளியானது ஓடிடி ரிலீஸ் தேதி!

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் 3 ஆண்டுகளுக்கு மேல் உருவாக்கத்தில் இருந்த நிலையில் ஒருவழியாக ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்பு படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ரிலீஸூக்குப் பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. சுத்தமாக ரசிகர்களால் படத்தோடு ஒன்ற முடியவில்லை. படத்தின் நீளம் 3 மணிநேரத்துக்கு மேல் இருந்தது ஒரு மிகப்பெரிய குறையாக சொல்லப்பட்டது. அதனால் சில நாட்களுக்குப் பிறகு 20 நிமிடம் ட்ரிம் செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் படத்துக்கு நல்லது நடக்கவில்லை. அதன் பின்னர் படம் பார்த்த ரசிகர்கள் படத்தை முழுவதும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குற்றம் சாட்ட ஆரம்பித்தனர்.

சமூகவலைதளங்களில் படத்துக்கு கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் மேல் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திரையரங்குகளில் இருந்து எப்போதோ தூக்கப்பட்டு விட்ட கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி 5 மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியிலாவது இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.