நடிகர் விக்ரம் உடல்நிலை பற்றி பரவிய வதந்திகள்…. மகன் துருவ் விக்ரம் அளித்த விளக்கம்!

0
201

நடிகர் விக்ரம் உடல்நிலை பற்றி பரவிய வதந்திகள்…. மகன் துருவ் விக்ரம் அளித்த விளக்கம்!

நடிகர் விக்ரம் நேற்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விக்ரம் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் அதை விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் மறுத்து விளக்கமளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனது தந்தைக்கு நெஞ்சுப்பகுதியில் அசௌகர்யமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு இல்லை. தவறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம். இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்துக்கு தேவையான பிரைவஸியைக் கொடுங்கள். அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்” என்று கூறியிருந்தார். துருவ்வின் இந்த பதிவு வெளியான சில மணிநேரங்களில் காவேரி மருத்துவமனை சார்பாகவும் அறிக்கை வெளியானது. அதிலும் விக்ரம் நலமாக இருப்பதாகவும் அவருக்கு மாரடைப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

Previous articleவிக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Next articleகாவலர்களுக்கு குட் நியூஸ்! சீருடை பணியாளர் தேர்வில் புதிய மாற்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here