விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா?

0
150

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா?

இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திராயன்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தை அடைந்து அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க முயற்சியில் செய்யப்பட்டது.

ஆனால் இந்த முயற்சியை கடைசி நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது. விக்ரம் லேண்டரிடமிருந்து இஸ்ரோ நிறுவனத்துக்கு வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதன்பின்னர் விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் அதுகுறித்த உறுதி செய்யப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் சற்று முன் நாசா தனது டுவிட்டர் தளத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட அப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப்பகுதியில் விக்ரம் லேண்டர் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இது குறித்த புகைப்படம் ஒன்றையும் நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து விக்ரம் லேண்டர் கண்டுபிடித்து விட்டதாகவும் அதனை செயல்பட வைக்க இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Previous articleமழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்!
Next articleகூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்!