பாகுபலி திரைப்படத்துக்கு செக் வைத்த விக்ரம் திரைப்படம்!! வசூல் வேட்டையில் பறக்கிறதா!!!

Photo of author

By Rupa

பாகுபலி திரைப்படத்துக்கு செக் வைத்த விக்ரம் திரைப்படம்!! வசூல் வேட்டையில் பறக்கிறதா!!!

Rupa

Updated on:

பாகுபலி திரைப்படத்துக்கு செக் வைத்த விக்ரம் திரைப்படம்!! வசூல் வேட்டையில் பறக்கிறதா!!!

இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரும் சினிமாவில் பல விருதுகளும் வாங்கி உள்ளார்.

தன் சிறு வயதில் இருந்தே தீராத நடிப்பு திறமை கொண்டவர். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.தற்போது வெளியாகி உள்ள விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் வசூல் எவரும் கானகிட்டாத லாபத்தை அடைந்தது.

தற்போது வரை உலகமெங்கும் ரூ. 320 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் என தெரிகிறது.தமிழகத்தில் ரூ. 40+ கோடிளவில் லாபத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி எந்த திரைப்படமும் வசூல் கிட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. பாகுபலியை அடுத்து இப்படம் அதிக வசூலை முறியடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.