இதுவரை படைத்திராத சாதனை படைத்த விக்ரம் படம்!! கொண்டாட்டத்தில் படக்குழு!!

0
100
Vikram movie has created an unprecedented record !! Film crew at the celebration !!
Vikram movie has created an unprecedented record !! Film crew at the celebration !!

இதுவரை படைத்திராத சாதனை படைத்த விக்ரம் படம்!! கொண்டாட்டத்தில் படக்குழு!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பலர் உள்ளனர். அதில் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருப்பவர் கமலஹாசன். இவரை மக்கள் நாயகன் என்று இவரின் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். மேலும் நடிகர் கமல், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் பகத் பாசில் மூவரும் இணைந்து தற்போது விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இது இந்திய அதிரடி த்ரில்லர் படம் ஆகும். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் கமலஹாசனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்திற்காக ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட மதிப்பெண் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரன் கையாண்டுள்ளார். இந்த ப்படம் 1986 ஆம் ஆண்டு உருவான விக்ரம் என்ற திரைப்படத்தின் அதே பெயரில் இத்திரைப்படமும் உருவாக உள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு டீசர் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 1986 இல் உருவான திரைப்படத்தின் தீம் பாடல் ரீமிக்ஸ் பதிப்பினை பயன்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் உள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் மூவரும் இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி வைரல் ஆனது. அந்த நிலையில் இப்படத்தை தற்போது ஹிந்தி டப்பிங் உரிமம் 35-லிருந்து 40 கோடி வரையில் வியாபாரமாக்கி உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் திரையுலகில் இதுவரை படைத்திராத சாதனையாக அதிக விலைக்கு விற்று முதல் முதலில் சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த செய்தி வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
CineDesk