டிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

0
159

டிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தற்போது அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வித்தியாசமான கதைக்களன்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை. இநிந்லையில் இப்போது அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

கோப்ரா திரைப்படத்தில் 7 கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் உள்ளது. பல தடைகளை தாண்டி ஒருவழியாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து பிரம்மாண்டமாக பல நட்சத்திரங்களுடன் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தற்போது சமூகவலைதளமான டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் விக்ரம். இது சம்மந்தமாக வீடியோ வெளியிட்டுள்ள அவர் ” ரஞ்சித் படத்துக்காக நான் தயாராகி வருகிறேன். நண்பர்கள் டிவிட்டரில் இணைய சொன்னார்கள். டிவிட்டர் தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான் லேட்டாக இணைகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் விக்ரம்க்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Previous articleKGF நிறுவனத்த்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்
Next articleவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்த குட் நியூஸ்!