வீர தீர சூரன் படத்துக்கு நான் பட்ட கஷ்டம்!.. விக்ரம் வெளியிட்ட வீடியோ!…

Photo of author

By அசோக்

வீர தீர சூரன் படத்துக்கு நான் பட்ட கஷ்டம்!.. விக்ரம் வெளியிட்ட வீடியோ!…

அசோக்

veera dheera sooran

Veera dheera sooran: நடிகர் விக்ரம் நடித்து கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம்தான் வீர தீர சூரன். சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த படம் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பக்கா ஆக்சன் என்பதால் இப்படத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால், ஓடிடி உரிமையை பலருக்கும் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால் இந்த படத்தில் பண முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர படம் வெளியாகவில்லை. அதன்பின் பேசி தீர்க்கப்பட்டு மாலை 5 மணிக்கே தியேட்டர்களில் வெளியானது. எனவே, முதல்நாள் வசூல் பாதிக்கப்பட்டது. தற்போது படம் வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் 50 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ஒரு ராவான, வித்தியாசமான ஆக்சன் படத்தை கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டே வீர தீரன் படத்தில் அவ்வளவு உழைப்பை போட்டோம். படத்தை பார்த்த சிலர் படம் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக பெரிய ஹிட் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், சில பிரச்சனைகளால் படத்தை 4 வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக்கூடாது என நீதிமன்றம் சொன்னது. இந்த படத்தை எப்படியாவது ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என தோன்றியது. சரி சினிமாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து படம் வெளியானது.

ஒருபடம் சொன்னபடி வெளியாகவில்லை எனில் அவ்வளவுதான். அதுவும் ரிலீஸ் தேதி அன்று முதல் 2 காட்சிகள் வெளியாகவில்லை. எனவே, என்ன ஆகுமோ என நினைத்தேன். ஆனால், ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ரசித்து பார்த்து வருகிறார்கள். சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்தோம் என்றெல்லாம் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களுக்கு நன்றி. படம் பார்க்காதவர்கள் பார்ப்பார்கள் என நம்புகிறேன்’ என பேசியிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vikram (@the_real_chiyaan)