விக்ரம் படப்பிடிப்பு தாமதம்! இந்த படம்தான் காரணமா?

0
148
Vikram shooting delays for the reason
Vikram shooting delays for the reason

விக்ரம் படப்பிடிப்பு தாமதம்! இந்த படம்தான் காரணமா?

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றது.ஏற்கனவே முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில் இரண்டாவது கட்டமாக இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கவுள்ளது.இந்த படத்தில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி,பகத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதனிடையே சூர்யா நடித்து வரும் எதற்கும் அஞ்சாதவன் படப்பிடிப்பும் காரைக்குடியில் நடந்து வருகிறது.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இயக்குனர் பாண்டிராஜ் படத்தை இயக்குகிறார்.இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா அருள்மோகன் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் சத்யராஜ்,திவ்யா,வினய்,சரண்யா பொன்வண்ணன்,இளவரசு,சுப்பு பஞ்சு,தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

விக்ரம் படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் காரைக்குடியில் நடத்தத் திட்டமிட்டிருக்கும் அதே இடத்தில்தான் எதற்கும் அஞ்சாதவன் திரைப்படமும் படமாக்கப்பட்டு வருகிறது.கொரோனாக் கட்டுபாடுகள் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என அதிகாரிகள் சொல்லிவிட்டனர்.இதனால் எதற்கும் அஞ்சாதவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே விக்ரம் படப்பிடிப்பு தொங்கும் எனத் தெரிகிறது.

மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படமும் இதே இடத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.கட்டுப்பாடுகள் காரணமாக விக்ரம் படக்குழுவினர் பொறுத்திருந்தே இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்துவர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.மேலும் விக்ரம் படக்குழு படப்பிடிப்புக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இதனால் விக்ரம் படக்குழு சற்றே கவலையில் உள்ளதாக தெரிகிறது.விரைவில் எதற்கும் அஞ்சாதவன் படப்பிடிப்பு முடிவடையும் எனவும் விக்ரம் படக்குழு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

author avatar
Parthipan K