“ஒரு கத சொல்லட்டுமா சார்…” VJS-ஐ நெருங்கினாரா ஹ்ருத்திக் ரோஷன்… விக்ரம் வேதா டீசர்

Photo of author

By Vinoth

“ஒரு கத சொல்லட்டுமா சார்…” VJS-ஐ நெருங்கினாரா ஹ்ருத்திக் ரோஷன்… விக்ரம் வேதா டீசர்

இந்தியில் உருவாகி வந்த விக்ரம் வேதா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் மிகப்பெரிய் வெற்றிப்படமாக அமைந்தது.விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்திய படமாக விக்ரம் வேதா அமைந்தது. நடிகர் மாதவனுக்கும் இறுதி சுற்று படத்துக்குப் பிறகு ஒரு ரி எண்ட்ரி படமாக அமைந்தது. இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இணையர் இயக்க, சாம் சி எஸ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் எதிர்பாராத வெற்றியால் இந்தியில் தாங்களே ரீமேக் செய்ய முயன்றனர் புஷ்கர் காயத்ரி. முதலில் அமீர்கான் விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் விலக, அவருக்குப் பதில் ஹ்ருத்திக் ரோஷன் அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். மாதவன் வேடத்தில் சைஃப் அலிகான் நடித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு முடிந்த நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து இன்று படத்தின் டீசர் ரிலீஸ் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட தமிழ் டீசரை ஜெராக்ஸ் எடுத்தது போலவே இந்தி டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னணி இசை மற்றும் காட்சி அமைப்புகள் கூட தமிழ் படத்தில் இருந்தது போலவே உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த டீசர் தமிழ் நாட்டிலும் கவனம் பெற்று வருகின்றது.