விஜய் சேதுபதியின் அடுத்த படம் என்னன்னு தெரியுமா?இந்த படத்தில் இணையும் விக்ரம்வேதா படத்தின் பிரபலம்!

Photo of author

By Parthipan K

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம் வேதா படத்தின் பிரபலம்!

இலங்கை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த
முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக அமைப்பது குறித்து தகவல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.

இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து இப்படப்பிடிப்பு தொடக்கம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றன.இப்படத்திற்கு 800 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக இருந்த சி எஸ்.சாம் தற்போது இப்படத்திற்கும் இசையமைக்க ஒப்புக்கொண்டார்.விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பும், சிஎஸ்.சாம் அவர்களின் இசையும் ஒன்றிணைந்து காண மக்கள் ஆர்வமாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.