விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: எங்களது முழு ஆதரவு உங்களுக்குத்தான்.. எடப்பாடியை விடாது துரத்தும் சீமான்!!

0
229
Vikravandi election echo: Our full support is for you
Vikravandi election echo: Our full support is for you

விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: எங்களது முழு ஆதரவு உங்களுக்குத்தான்.. எடப்பாடியை விடாது துரத்தும் சீமான்!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுக-வை எதிர்த்து அதிமுக தலைவர் தனது முழு எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்.இது குறித்து சிபிஐ விசாரணை வைக்கும் படியும் வலியுறுத்தியுள்ளார்.ஆனால் இதனை ஆளும் கட்சியானது முழுமையாக மறுத்து வருகிறது.இது குறித்து, நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் தெரிவித்த பொழுதும் அதிமுக அமலியில் ஈடுபடுவதாக கூறி அவையில் இருந்து வெளியேறும் படி உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து ஆளுநரை நேரில் சந்தித்தும் எடப்பாடி அவர்கள்,கள்ளக்குறிச்சி விவகாரத்தில்  சிபிஐ விசாரணை வைக்கும்படி வலியுறுத்தி மனு கொடுத்துள்ளார். இதனிடையே விக்கிரவாண்டி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதனை அதிமுக புறக்கணித்துள்ளது.ஒரு பக்கம் பாமகவை ஆதரித்து தான் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.ஆனால் நாம் தமிழர் கட்சி சீமான் இந்த விக்கிரவாண்டி தேர்தலை எதிர்கொள்ள எங்களுக்கு அதிமுகவின் ஆதரவு தேவை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை இதுகுறித்து எந்த ஒரு பதிலும் அளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி மௌனம் காத்து வருகிறார்.இந்நிலையில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் திமுகவை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி பொருளாளர் உள்ளிட்டவரும் தங்களின் ஆதரவை தற்பொழுது தெரிவித்துள்ளனர்.விக்கிரவாண்டி தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் இணைய நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.