தமிழகத்தில் உள்ள கிராமங்களில், வேளாண் குறித்து ஆலோசனை நடத்த ,கிராம சபை கூட்டம் நடைபெறும். ஆனால், இறுதி நேரத்தில் தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. கிராமசபை கூட்டங்களை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் பல இடங்களில் கிராம சபை கூட்டமானது நடத்தப்பட்டது.
ஆம்பூரில் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் ஆம்பூரை அடுத்த அரங்கள்தூர்கம் கிராமத்திலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மருதநல்லூர் கிராமத்திலும் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கமுதி கிராம சபை கூட்டமானது சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகத்தின் முன்பு தடையை மீறி ,சமுக இடைவெளியுடன் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் சுதந்திரபாளையம் கிராமத்தில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் மோட்டூர் மற்றும் வன்னிகோடு கிராமத்தில் தடைசெய்யப்பட்ட கிராம சபைக் கூட்டத்திற்கு எதிராக கிராமசபை கூட்டமானது நடைபெற்றது.