கள்ளச்சாராயம் விற்ற இளைஞர்களை விறகு கட்டையால் வெளுத்து வாங்கிய கிராம பெண்கள்!

Photo of author

By Pavithra

கள்ளச்சாராயம் விற்ற இளைஞர்களை விறகு கட்டையால் வெளுத்து வாங்கிய கிராம பெண்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட எல்லை கிராமங்களில்,காரைக்காலில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக கள்ளச் சாராய பாக்கெட்டுகளை கடத்திவந்து விற்ற இளைஞர்களுக்கு, அக்கிராமத்து பெண்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

காரைக்காலில் இருந்து சட்டத்திற்கு எதிராக, சில இளைஞர்கள் கள்ளச் சாராய பாக்கெட்டுகளை கடத்திவந்து நாகப்பட்டின மாவட்ட எல்லை கிராமங்களில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமே இருந்திருக்கின்றன.

இந்நிலையில்,அந்த இளைஞர்கள் கீள்வெளூர் ஆனைமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தெரியவந்தது.கள்ளச்சாராயம் விற்றது இளைஞர்கள் என்பதால்,அதிர்ச்சிக்குள்ளான கிராம பெண்கள்,அந்த இளைஞர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இளைஞர்களை விறகு கட்டையால் அடித்துள்ளனர்.பின்பு தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாராயம் விற்ற நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.கொரோனாவால் வேலையின்றி தவிக்கும் சில இளைஞர்கள் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.