Rajapalayam:கிராம மக்களிடம் பண மோசடி செய்த காரணத்தால் டிரான்ஸ் இந்தியா நிறுவனம் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கிராம மக்களிடம் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் கிராமத்தில் உள்ளார்கள், அவர்களுக்கு என்ன தெரிய போகுது அப்படின்னு சில நிறுவனங்கள் அதிக பணம் தருவதாக கூறி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை ஏமாற்றியதாக டிரான்ஸ் இந்தியா நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.
அந்த நிலையில் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகளாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட மகேஸ்வரன் மற்றும் அனிதா ஆகிய இருவர் ரூபாய் 10,000 கட்டி அடையாள அட்டை வாங்கும் நபர்களுக்கு வாரம் ஆயிரம் ரூபாய் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும், குறைந்த பட்சம் ஐந்து அடையாள அட்டை ரூபாய் 50,000 செலுத்தி வாங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு வாரம் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அதனை நம்பி அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து, பின் பலரையும் இணைந்துள்ளார்கள். ஆனால் சில மாதங்களுக்கு பின் எந்த ஒரு பணமும் தனது கணக்கிற்கு வரவில்லை என அறிந்து கொண்டனர். இதனால் மாற்றப்பட்டதை அறிந்த கிராம மக்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பிறகு ராஜபாளையம் காவல் நிலையத்தில் மோசடி செய்தாக பொதுமக்கள் வழக்கு போட்டார்கள்.
அப்போது அந்த நிறுவனம் புதிய உறுப்பினர்களை இணைப்பதற்காக தனியார் அரங்கில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அறிந்த மக்கள் அங்கு சென்று அந்த நிறுவனத்தைச் சேர்ந்த செழியன் என்பவரை கண்டுபிடித்து தங்களின் பணம் எங்கே என கேட்க, அவர் மக்களிடம் இருந்து தப்பி ஓடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.