சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சோளி கவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். மேலும் இந்த பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுப்பதாக தெரிய வருகிறது.
மேலும் இதற்கிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும் மாற்று இடமாக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த நிலத்தை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாமதம் செய்வதாகவும் குற்றம் சாட்டை வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்துவதாகவும் கூறினால் அந்த போராட்டத்தின் காரணமாக விரைவில் அந்த இடத்தை தருவதாகவும் அதிகாரிகள் கூறுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் ஓமலூர் தாலுக்கா அலுவலகத்திற்கு நேற்று மதியம் அங்கு வசிக்கும் 20 குடும்பமும் சென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு போராடி வருகிறோம் என்றும் வேதனை தெரிவித்தனர். மேலும் இந்தப் போராட்டம் நடத்தியவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது வருகிற இரண்டாம் தேதி தாசில்தார் நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பிறகு இந்த போராட்டத்தை கைவிடும்மாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்ற இந்த தருணா போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவி காணப்பட்டது.