அண்ணாத்த படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவின் 80’sல் முன்னணி நடிகரான வலம்வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்றுவரை சினிமா துறையில் கொடிகட்டி பறக்கிறார்.

தற்போது  நடிகர் கமலுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார்.  சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமாக அண்ணாத்த படத்தை தேர்வு செய்துள்ளார்.  அண்ணாத்த படமானது 24பிப்ரவரி2020 அன்று வெளியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.

ஆனால், கொரோனா முடக்கத்தான், எல்லா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில், ரஜினி நடித்துவரும் அண்ணாத்த  படம் எப்போ ரிலீஸ் ஆகப்போகிறது?  என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது.

சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தை, இமான் இசையமைக்கிறார். இளம் நடிகர் வில்லனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்அர்ஜய், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே, நான் சிகப்பு மனிதன், நாய்கள் ஜாக்கிரதை, பெங்களூர் டேஸ், சண்டக்கோழி2 போன்ற படங்களில் இவர் வில்லனாக  நடித்துள்ளார்.

அர்ஜய் நடித்த மற்ற படங்களை எல்லாம் விட, சூப்பர்  ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் அண்ணாத்த படமானது அர்ஜயின் மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்று சினிமா  வட்டாரத்தில் பெரிதும் பேசப்படுகிறது.