திரையில் வில்லன்!! நிஜத்தில் மாமனிதன்!!

Photo of author

By Gayathri

திரையில் வில்லன்!! நிஜத்தில் மாமனிதன்!!

Gayathri

Villain on screen!! Man in reality!!

1980களில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தவர் தான் நடிகர் சுமன் அவர்கள். இவர் தற்பொழுது தன்னுடைய சொந்த நிலத்தினை ராணுவ வீரர்களுக்கு எழுதிக் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

திரையுலகில் இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். மேலும் இதனைத் தொடர்ந்து குருவி மற்றும் ஏகன் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் தற்பொழுது, நடிகர் சுமன் அவர்கள் ஹைருபாட்டில் உள்ள தன்னுடைய நீளமான 175 ஏக்கர் நிலத்தினை நாட்டை ஆளும் ராணுவ வீரர்களுக்காக எழுதி கொடுத்துள்ளார்.

திரையில் வில்லனாக தோன்றினாலும் நிஜத்தில் தான் ஒரு மாமனிதர் என்பதனை இவர் செய்துள்ள இந்த காரியம் நிரூபித்துள்ளதாக அனைவரும் மகிழ்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவர் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1980கள் மற்றும் 1990களில் தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வந்துள்ளார்.