விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கள்ளச்சாராய விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் நிலையில் கெமிக்கல் தொழிற்சாலையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் வாந்தி வயிற்று வலி ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து அவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல விஷச்சாராயம் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் மதுரவாயல் பகுதியில் விநாயாகா எண்டர்பிரைசஸ் என்ற கெமிக்கல் பேக்டரி நடத்தி வரும் இளைய நம்பியை காவல் துறையினர் கைது செய்தனர்.
கெமிக்கல் பேக்டரி உரிமையாளர் இளையநம்பி அவர்களிடம் இருந்து 1000 லிட்டர் மெத்தனால் என்ற விஷச்சாராயம் வாங்கப்பட்டது தெரியவந்ததால் இளையநம்பி அவர்களை காவல்துறையினர் சென்னையில் கைது செய்துள்ளனர்.